நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
- மாணிக்கவாசகர்
நாட்டுக்கோட்டை நகரத்தார் அன்னதான அறக்கட்டளை

Nattukottai Nagarathar Annadhana Trust Devakottai Sri Kalahasti Nagara Viduthi Sri Kalahasti Dear Appeal to the People The most prominent of the red sites is Sri Kalahasti called Thirukkalathy.

This is the gas level in the panchaputra sites. Here, Lord Shiva has a temple in the form of air (air) as Kalathinathara. The place where Thinnappan was blessed to become Kannabhan. We have been donating to thousands of loved ones on Maha Shivaratri for 30 years.

நாட்டுக்கோட்டை நகரத்தார் அன்னதான அறக்கட்டளை தேவகோட்டை ஸ்ரீ காளஹஸ்தி நகரவிடுதி ஸ்ரீ காளஹஸ்தி நகரத்தார்பெருமக்களுக்கு அன்பான வேண்டுகோள் சிவத் தலங்களில் மேலான சிறப்புடையது திருக்காளத்தி என்னும் ஸ்ரீ காளஹஸ்தி ஆகும். இது பஞ்சபூதத் தலங்களில் வாயுத் தலமாகும். இங்கே வாயு (காற்று) வடிவில் சிவபெருமான் காளத்திநாதராகக் கோவில் கொண்டுள்ளார்.அம்பாள் ஞானப்பூங்கோதை. திண்ணப்பன் கண்ணப்பன் ஆக அருள் பெற்ற தலம்.நாங்கள் 30 வருடமாக மஹா சிவராத்திரி அன்று ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு அன்னதானம் செய்து வருகிறோம்.இஙுகு நகரத்தார்கள் மற்றும் தமிழ் மக்கள் வந்து தங்கிச்செல்ல நகரவிடுதி இல்லை.ராகு கேது பரிகாரத்திற்காக ஏராளமான தமிழ் மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள்.அவர்கள் வசதிக்காகவும் தொடர்ந்து அன்னதானம் சிறப்பாகச் செய்துவரவும் நாங்கள் ஒரு நகரவிடுதி கட்டும் முயற்சியில் ஏடுபட்டுள்ளோம்.தாங்களும் இந்தப் புனிதப் பணியில் பங்கு கொள்ள வேண்டுகிறோம்.
ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளிப்போருக்கு மூன்று நாட்கள்,இரண்டு லட்சம் அளிப்போருக்கு ஏழுநாட்கள் மூன்றுலட்சம் அளிப்போருக்குப் பத்து நாட்கள் கட்டணமின்றித் தங்க அறைகள் வழங்கப்பெறும். சிவராத்திரித் திருவிழா பத்து நாட்களும் அறை நன்கொடை யாளருக்கு மட்டுமே அறைகள் தரப்படும்.
25000 ரூபாய்க்கு மேல் நன்கொடை வழங்குபவர் பெயர் கல்வெட்டில் இடம்பெறும். தாங்கள் தாரளமாக நன்கொடை வழங்கிச் சிவனருள் பெறவேண்டுகிறோம்.

Mr. N. Ramanathan Chettiar

Important Links
Sri Kalahasthi Nagara viduthi
Latest News

நாட்டுக்கோட்டை நகரத்தார் அன்னதான அறக்கட்டளை சார்பாக ஶ்ரீகாளஹஸ்தியில் கடந்த 09-06-2022 வியாழக் கிழமை அன்று வெகு சிறப்பாக பூமி பூஜை நடத்தப்பட்டு பணிகள் துவங்கின. இந்த நிகழ்வில் நகரத்தார் பெருமக்கள், அறக்கட்டளை டிரஸ்டிகள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

Invite you all our members for Our Kalakashthi Viduthi Boomi Booja going to be held on 9th June 2022. Please come for this celebration and give support.

Gallery